Friday, September 13, 2013

குருநாகல் பள்ளிவாயலில் பத்து இலட்சத்து 40000 ரூபா கொள்ளை


குருநாகல் மல்லவபிடிய ஜும் ஆப் பள்ளிவாயலில் பத்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் மல்லவபிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள மல்லவபிடிய ஜும்மாப் பள்ளிவாயலில் உண்டியல் மற்றும் காரியாலய பாதுகாப்புப் பெட்டி என்பன உடைக்கப்பட்டு சுமார் பத்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பத்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இரண்டு காசோலைகளும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments