Monday, September 30, 2013

75000 கோடி கடனில் இருக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் தற்போது 75,000 கோடி ரூபா கடனில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார். 

தேசிய சேமிப்பு வங்கி நூற்றுக்கு ஒன்பது வீத வட்டிப்படி 750 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பொதுநலவாய மாநாட்டுக்காக 500 கோடி செலவு செய்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அம் மாநாடு முடிந்ததன் பின்னர் அமைச்சர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

மாகாணசபைத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்த போதும் வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டது சுமூகமான தேர்தலை அடையாளப்படுத்தவில்லை எனவும் தயா கமகே கூறினார்.
Disqus Comments