Sunday, September 8, 2013

மாலைதீவு ஜனாதிபதியாக முகமது நஷீத் மீண்டும் தெரிவு

இந்திய பெருங்கடல் நாடான மாலத்தீவில், மமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008–ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது.

அதில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வகீத், அதிபர் ஆனார்.

இந்நிலையில், 2–வது ஜனநாயக தேர்தல் 07-09-2013 நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் முகமது வகீத், முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் ப்ராகிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மாலத்தீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். 192 தீவுகள், 40 ரிசார்ட்டுகள் ஆகியவற்றில் 470 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7.30 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். அதிபர் முகமது நஷீத், ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார். வரிசையில் நிற்க சொன்னதால், அவருடைய மனைவி ஓட்டுப்போடவில்லை.

மாலை 4 மணிக்கு முடிவடைந்த ஓட்டுப்பதிவில், 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின. உடனடியாக, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முன்னாள் அதிபர் முகமது நஷீத், அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 18 மாத இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் அதிபராக பொறுப்பு ஏற்கிறார்.

 பிறகு நிருபர்களிடம் பேசிய முகமது வகீத், தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இத்தேர்தலில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். 2 ஆயிரத்து 229 உள்ளூர் பார்வையாளர்களும், 102 சர்வதேச பார்வையாளர்களும், ஆயிரத்து 342 அரசியல் கட்சி பிரதிநிதிகளும், சுமார் 2 ஆயிரம் உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்த தேர்தலை கண்காணித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு வழக்கு தொடர்பாக தேடப்பட்டபோது, அவர் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments