சீனாவில் மது போதையில் இருந்த தாய் தன் குழந்தைகளை பரிதாபமாக கொலை செய்துள்ளார்.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த பெண் லீ யான்(வயது 22), போதை பழக்கத்துக்கு அடிமையானவர்.இவருக்கு, இரண்டு மற்றும் ஒரு வயதில் குழந்தைகள் இருந்தனர். போதையால் இப்பெண் தன்னுடைய குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை.
இந்நிலையில், கடந்த, ஜூன் மாதம், குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு, வெளியே சென்ற லீ யான், வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் பசியிலேயே இறந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், புகார் கொடுத்ததின் பேரில், காவல்துறையினர் வீட்டை உடைத்து குழந்தைகளின் சடலங்களை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தாய் லீ யான் கைது செய்யப்பட்டார்.
இவரது கணவரும் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.