Sunday, September 8, 2013

2020 ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானின் டோக்கியோ நகரில்

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ நகரம் தெரிவாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பிலேயே டோக்கியோ தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரண்டாவது தடவையாக டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தவுள்ளது. இதற்கு முன்னர் 1964ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை டோக்கியோ நடாத்தியிருந்தது. இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் டோக்கியோ நகரம் எகிப்தின் இஸ்தான்ஃபுல்லைத் தோற்கடித்து இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.

வாக்கெடுப்பில் டோக்கியோ 60 வாக்குகளையும் இஸ்தான்ஃபுல் 36 வாக்குகளையும் பெற்றுக்கொண்டன. 32ஆவது ஒலிம்பிக் தொடரை 2020ஆம் ஆண்டில் நடாத்துவதற்கு அதிக வாய்ப்புக்களுள்ள நகரமாக டோக்கியோவே ஆரம்பத்திலிருந்து கருதப்பட்டு வந்தது.

எனினும் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்டுள்ள கதிரியக்க நீரின் கசிவு காரணமாக டோக்கியோவின் வாய்ப்புக்கள் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டோக்கியோவிலிருந்து 150 கிலோ மீற்றர்கள் தூரத்திலுள்ள புகுஷிமா அணு உலையின் கசிவின் காரணமாகப் பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதாகவும் ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபே உறுதிபடத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வெற்றி ஜப்பானுக்குக் கிடைத்துள்ளது. 


Disqus Comments