Sunday, September 8, 2013

வருடாந்தம் சுமார் 3500 பேர் தற்கொலை செய்கின்றனர் - சுகாதார அமைச்சு

வருடாந்தம் இலங்கையில் சுமார் 3500 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பொரை அதிலிருந்து காப்பாற்ற வேண்டியது சமூகத்தின் கடமை என சுகாதார கல்விப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் நீலமனீ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இதேவேளை, தியவன்னா ஒயாவில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த சடலம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த சடலம் அத்துருகிரிய பகுதியில் காணாமற்போனதாக கூறப்படும் பெண் ஒருவருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Disqus Comments