Wednesday, October 16, 2013

2013 - ஹஜ் யாத்திரை, 20 மில்லியன் ஹாஜிகள் (படங்கள்)

ஹஜ்ஜின் உச்சகட்ட நிகழ்வான அரஃபா பிரார்த்தனை நேற்று முன்தினம் நடைபெற்றது. சுமார் 2 மில்லியன் ஹாஜிகள் உலகெங்கிலுமிருந்து அரஃபா மைதானத்தில் ஒன்று கூடினர்.  

ஹாஜிகள் கேட்கும் அனைத்து துஆவும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் இந்த முக்கிய இடத்தில், ஹாஜிகள் அனைவரும் கண்ணீர் விட்டு துஆ கேட்டனர்.

மேலும் அன்றைய நன்பகல் இமாம் சேக் அப்துல் அஜீஸ்பின் அப்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய குத்பா உரையில், "உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
உலக முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் எதிரிகளிடமிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு கோரி அல்லாஹ்விடம் பிரார்த்னை மேற்கொள்ளுமாறும் அவரது உரையில் வேண்டுகோள் வைத்தார்.
 
முன்னதாக இன்று அதிகாலை முதலே அதிரை ஹாஜிகள் அனைவரும் ரயில் மூலம் மினாவிலிருந்து அரஃபா சென்றடைந்தனர்.

இன்று இரவு முஸ்தலிபா வந்தடைவார்கள் பின்பு நாளை காலை மினாவிற்கு மீண்டும் வந்து ஷைத்தானுக்கு கல்லெரிதால், தவாப் செய்தல் என மேலும் மூன்று தினங்கள் மினாவில் ஹாஜிகள் தங்கியிருப்பார்கள்.
 
















 
 
Disqus Comments