Sunday, October 13, 2013

(படங்கள்) றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து நிர்மாணித்த வீடு கையளிக்கப்பட்டது.

(மூதூர் முறாசில்) மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக   ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து நிர்மாணித்த  வீடு இன்று ஞாயிற்றுக் கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. 

மிகச் சிறப்பாக இடம்பெற்ற  இந்நிகழ்வில் இரானுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜென்ரல் லால் பெரேரா, கேணல் விகும் லியனகே, சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மெத கொட அபே திஸ்ஸ தேரர், வர்த்தகப் பொருளாதாரத ;துறைத் தலைவர்  கலாநிதி அநுர குமார உதுமான்கே மற்றும்  பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதும் ஆயுதம் தரிக்காத பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டதோடு பொது மக்களை எவ்வித பரிசோதனையும் இல்லாது சிநேகிதமாக நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்ததானது மூதூரில் யுத்ததின் பின் இடம்பெற்ற முதலாவது வைபவமென  பலரும் பேசிக் கொண்டனர்.

மரண தண்டனைக்குள்ளான றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதியளித்த போதும் அவர்களில் எவரும் முன்வராத நிலையில் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து வீடொன்றை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.











Disqus Comments