Sunday, October 13, 2013

தம்­புள்ளை பள்ளி உடைக்­க­ப்­ப­ட­மாட்­டா­து: ஜனா­தி­பதி மீண்டும் உறு­தி­ய­ளிப்­பு

(VD)எக்காரணம் கொண்டும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக்ஷ உறுதியளித்­துள்­ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று வௌ்ளிக்­கி­ழ­மை பாராளுமன்றக் கட்டடிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இக்  கலந்தரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபர். இராணுவத் தளபதி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்­போதே ஜனா­தி­பதி மேற்­படி வாக்­கு­று­­தி­யை வழங்­கி­ய­தாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மேலும் தெரிவித்தார்.
 
இக்  கலந்துரையாடலின்போது தம்புள்ளையில் வாழும் 42 குடும்பங்களுக்கு தம்புள்ளை நகரில் வேறு இடத்தில் வீடுகள் வழங்கவும் இந்­து கோயிலுக்குப் பதிலாக தம்புள்ளை நகரப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் அதனை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்­ள­து.
 
இதேவேளை தம்புள்ளையில் உள்ள பள்ளிவாசலின் ஒரு பகுதி வீதி அபிவிருத்திப் பணி­­க­ளுக்குள்  உள்­ளடங்குவதால்  அதனை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்­கொள்ள எத்­த­னித்த போதிலும் பள்­ளி­வா­சலை அகற்றுவதில்லை என ஜனாதிபதி அறி­வித்­த­தா­­கவும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.
 
தம்­புள்ளை பள்ளி­வாசல் உடைக்­கப்­ப­ட­மாட்­டாது என ஏலவே ஜனா­தி­பதி தம்­மிடம் உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரும அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.
Disqus Comments