Friday, October 18, 2013

இந்திய வம்சாவளிப் பெண் அமெரிக்காவில் அமைச்சராகிறார்!

இந்திய வம்சாவளியை சார்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவின் அமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சார்ந்த நிஷா தேசாய் பிஸ்வாலை தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை அமைச்சராக்க கடந்த ஜீலை மாதம் அதிபர் ஒபாமா பரிந்துரை செய்திருந்தார்.

இப்பரிந்துரைத் தொடர்பாக சென்ட் சபையின் வெளியுறவுக் குழுவில் விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் நிஷா தேசாய் பிஸ்வாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  நிஷா தேசாய்  விரைவில்  அமெரிக்காவில் துணை அமைச்சராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.
Disqus Comments