Friday, October 4, 2013

புலமைப் பரிசிலில் சித்தியடைந்த ஒரேயொரு புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலய மாணவன்.

கடந்த 1ம் திகதி வெளியான புலமைப் பரிசில் பரிட்சை முடிவுகளின் படி புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலய மாணவன் செல்வன் M.J.M. ஹிஸான் 163 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தில் இம்முறை 37 மாணவா்கள் பரிட்சைக்குத் தோற்றினா். தோற்றிய மாணவா்கள் குறித்த மாணவன் மட்டுமே சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புழுதிவயலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவா் அக்கரைப்பற்றுப் பிரதேச பிரபல கணிதப் பாட ஆசிரியா் ஜனாப் முகம்மது ஜமால்தீன் அவா்களின் செல்வப் புதல்வனாவார்.  1936ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புழுதிவயல் பாடசாலையில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்தவா்கள் வரிசையில் 8ம் இடத்தைப் பெற்றுள்ளார். இதற்கு ஏழு போ் மட்டுமே இதுகால வரைக்கும் சித்தியடைந்துள்ளனா். அந்த ஏழு பேரில் செல்வன் M.J.M. ஹிஸான் அவா்களின் சகோதரியும் ஒருவராவார்.
(எமது ரெட்பானா செய்திகள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.)
தந்தையும் மகனும்

Disqus Comments