Friday, October 4, 2013

மூன்று பொதிகளிலும் இருந்த வாக்குச் சீட்டுக்களின் எண்ணிக்கை - 6386

(எம். எஸ். முஸப்பிர்)புத்தளம் சென்.அன்றூஸ் கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட  வாக்குச்சீட்டுகள் அடங்கிய மூன்று பொதிகளிலும் 6386 வாக்குச்சீட்டுகள் இருந்துள்ளன. அவற்றில் 78 வாக்குச்சீட்டுகள் பழுதடைந்த வாக்குச் சீட்டுக்களாகும்.

மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய மூன்று பொதிகளும் புத்தளம் பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில இன்று வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.

இதன் போது புத்தளம் உதவி மாவட்டச் செயலாளர்,  வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சமூகமளித்திருந்தனர்.

இந்த பொதிகளிலிருந்த வாக்குச்சீட்டுகள் இரண்டு பெட்டிகளில் போடப்பட்டிருந்தன. அதில் ஒருபெட்டியில் 3893 வாக்குச்சீட்டுகள் இருந்தன. அந்தபெட்டியில் 61 வாக்குச்சீட்டுகள் கிழிந்திருந்தன.

இரண்டாவது பெட்டியில் 2493 வாக்குச்சீட்டுகள் இருந்ததுடன் 17 வாக்குச்சீட்டுகள் கிழிந்திருந்துள்ளன.

இந்த வாக்குச் சீட்டுக்கள் கடந்த 24 ஆம் திகதி புத்தளம் சென் அன்றூஸ் கல்லூரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன. அங்கு வருகை தந்திருந்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய அங்கு கூடியிருந்த வேட்பாளர்களிடம் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த வாக்குச் சீட்டுக்களை வேட்பாளர்களின் முன்னிலையில் சீல் வைத்து பொலிஸார் ஊடாக புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதனடிப்படையில் இந்த வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் புத்தளம் நீதிமன்றத்தில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் இன்று எண்ணப்பட்டதுடன் இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருகின்றது. 

Disqus Comments