Monday, October 14, 2013

வளைந்த திரையுடன் செம்சுங் கெலக்ஸி ரவுண்ட்

இதுவரை காலமும் அசாத்தியமானதாகவும், ஓப்பீட்டளவில் சாத்தியமற்றதாகவும் கருதப்பட்ட வளைந்த திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை உருவாக்கி செம்சுங் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முற்றிலும் வளைக்கக்கூடிய ஸ்மார்ட் போனாக இல்லாத போதிலும், அதனை நோக்கிய முதற்படியாக இந்த ஸ்மார்ட் போனை கருதமுடியும்.

எல்.ஜி. நிறுவனம் வளையக்கூடிய ஸ்மார்ட் போனை வெளியிடப்போவதாக அண்மையில் தெரிவித்திருந்தது. அதே காலப்பகுதியிலேயே செம்சுங் நிறுவனமும் இத்தகைய அறிவிப்பை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் செம்சுங் வளைந்த திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

கெலக்ஸி ரவுண்ட் எனப் பெயரிட ப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனானது 5.7 அங்குல Super Flexible எமோலெட்  Full HD திரையைக் கொண்டுள்ளது.

இத்திரையே இதனை சந்தையில் உள்ள மற்றைய ஸ்மார்ட் போன்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.
இது தவிர 3 ஜிபி ரெம், 32 GB உள்ளக நினைவகம் போன்ற வசதிகளையும் கெலக்ஸி ரவுண்ட் வழங்குகின்றது.
இதன் சில தொழிநுட்ப அம்சங்கள் வருமாறு

Camera         Primary 13 MP, 4128 x 3096 pixels, autofocus, LED flash
Video             2160p@30fps, 1080p@60fps
Secondary   2 MP, 1080p@30fps
OS                  Android OS, v4.3 (Jelly Bean)
Chipset         Qualcomm Snapdragon 800
CPU               Quad-core 2.3 GHz Krait 400
GPU               Adreno 330


தற்போது தென்கொரியாவில் மட்டுமே இது வெளியாகியுள்ளது. மேலும் இதன் விலை சுமார் 1000 அமெரிக்க டொலர்களாகும்.

இது சந்தையில் எவ்வாறான வரவேற்பைப் பெறப்போகின்றது என்பதை வைத்தே இதே போன்று வளைந்த திரையைக் கொண்ட அல்லது இதனை விட மேம்பட்ட முற்றாக மடியக் கூடிய ஸ்மார்ட் போன்களை மற்றைய நிறுவனங்களும் வெளியிடும்.

 இவ்வாறான புதிய முயற்சிகள், வித்தியாசமான சிந்தனைகள் தொடர்ந்தும் வெளியாக வேண்டுமெனில் அவை வெற்றி பெறுவது அவசியமாகின்றது.
எனினும் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என சற்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்


Disqus Comments