Monday, October 21, 2013

இந்தியாவில் வட்டியில்லா வங்கி: மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் வட்டியில்லா வங்கி முறையினை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் தலைவராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டதுமே, இந்தியாவில் வட்டியில்லா வங்கி முறை அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளிவரத் துவங்கின. இந்நிலையில், இத்திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் திட்டக் குழு துணைத்தலைவர் அலுவாலியா ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.  

இவ்வங்கியில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது என்பதால், இத்திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவ்வங்கி முறை இஸ்லாமிய சட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.  ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் 2008ஆம் ஆண்டே இத்திட்டத்தை பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
Disqus Comments