Monday, October 21, 2013

Android Phone களில் தமிழில் டைப் பண்ணுவது எப்படி?

2008ம் ஆண்டு உத்தியோக பூா்வமாக போன்கள் மற்றும் டேப்லெட் போன்றவற்றுக்கான இயங்கு தளமான  Android வெளியிட்டது Google. அன்று முதல் இன்று வரை அதன் வளா்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தோடு தொடுதிரைகளுடன் கூடிய ஆன்ட்ராய்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இணையப் பாவனைக்கு மிக இலகுவாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட் போன்களை அதிகமானவா்கள் முகநுல் உபயோகத்துக்கான அதிகம் பயன்படுத்துகின்றனா். ஆனால் ஆங்காங்கு தமது கருத்துக்களை தமது சொந்த மொழியான தமிழ்மொழியில் எப்படி பதிவிடுவது என்று இனிமேல் யோசிக்கவே வேண்டாம். Android Phoneகளில் தமிழில் டைப் செய்வதற்கு இன்று பல அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. அதில் மிக இலகுவானது என்பதை பார்ப்போம்.

Sellinam

தற்போது நான் பயன்படுத்தும் அப்ளிகேஷன் இதுதான். மிக எளிதாக எழுதும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில் கீபோர்ட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி கீபோர்டை பயன்படுத்தி எழுத விரும்பும் நண்பர்களுக்கு உகந்த அப்ளிகேஷன் இது தான்.
அதற்கான எழுதுவது கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், மிக மிக எளிதாகவே உள்ளது.

 இதன் இன்னொரு சிறப்பு தமிழில் எழுதும் அதே நேரத்தில் உடனே ஆங்கிலத்துக்கு மாற இடது கீழ் மூலையில் உள்ள “மு/த” என்பதை கிளிக் செய்தால் போதும். அதே போல தான் தமிழுக்கும். குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருவதும் ஒரு சிறப்பம்சம்.

 தரவிரக்கம் செய்ய Sellinam




குறிப்பு இன்னும் பல மென்பொருட்கள இருக்கின்றன.
Disqus Comments