Friday, October 11, 2013

புனித அல் குர்ஆனை கற்றுக்கொள்ளவதாக கூறும் அமெ­ரிக்­காவின் பிர­பல பொப்­பிசைப் பாட­கி­ மடோனா

அமெ­ரிக்­காவின் பிர­பல பொப்­பிசைப் பாட­கி­யான மடோனா பல ஆண்­டு­க­ளாக யூத மதத்தின் கப்­ப­லாஹ்வை பின்­பற்றி வந்த நிலையில், தற்­போது புனித அல் குர் ஆனை கற்­றுக்­கொள்ள ஆரம்­பித்­துள்­ளாராம்.

55 வய­தான மடோனா, இசைத்­து­றையில் கொடி­கட்டிப் பறந்­தாலும் தனிப்­பட்ட வாழ்க்­கையில் நிம்­ம­தியைத் தேடி ஆன்­மி­கத்தில் அதிக நாட்டம் கொண்­டுள்­ள­தாக கூறு­கிறார்.

இவர் ரோமன் கத்­தோ­லிக்­க­ராக வளர்ந்­தவர். ஆனால், 1996 ஆம் ஆண்டு அவர் யூத மதத்தின் கப்­பலாஹ் பிரிவை பின்­பற்றத் தொடங்­கினார். கடந்த 17 வரு­டங்­களாக  கப்பலாஹ்வை பின்பற்றிய அவர், பின்னர் பிரிட்­டனைச் சேர்ந்த திரைப்­பட இயக்­கு­ந­ரான கை ரிச்­சியை திரு­மணம் செய்­த­வுடன் கை ரிச்­சி­யையும் கப்­பலாஹ் பிரார்த்­த­னை­களில் பங்­கு­பற்றச் செய்தார் மடோனா.

கை ரிச்சி, மடோனா  திரு­மண வாழ்க்கை 2008 ஆம் ஆண்டு முறிந்த பின்னர் பிரே­ஸிலைச் சேர்ந்த ஜீசஸ் லஸ் எனும் 26வயது இளை­ஞரை மடோனா காத­லித்தார்.

கடந்த சில வரு­டங்­க­ளாக தனது  குழு­வி­லுள்ள 26 வயது நடனக் கலை­ஞ­ரான பிரஹீம் ஸைபத் எனும் இளை­ஞரை மடோனா காத­லிக்­கிறார். பிரான்ஸ் நாட்­ட­வ­ரான பிரஹீம் ஸைபத் இஸ்­லா­மிய மதத்தைச் சேர்ந்­தவர். இந்­நி­லையில் மடோ­னாவும் இஸ்­லாத்தை கற்­றுக்­கொள்ள ஆரம்­பித்­துள்­ளாராம்.

“அனைத்து புனித நூல்­க­ளையும் கற்­றுக்­கொள்­வது  அவ­சியம் என  நான் எண்­ணு­கிறேன்” என்­கிறார் மடோனா.

“இஸ்­லா­மிய நாடு­களில் சிறு­மி­க­ளுக்­காக நான் பாட­சா­லை­களை நிர்­மா­ணித்து வரு­கிறேன்.
கடந்த காலத்தில் மடோனா கப்­ப­லாஹ்வை பின்­பற்­றி­ய­போது அவரின் நம்­பிக்கை குறித்து யூத மதத் தலை­வர்கள் பலர் கேள்வி எழுப்­பி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. இதனால் விச­ன­ம­டைந்த மடோனா, தான் நாஸிக் கட்­சியில் இணைந்­தி­ருந்தால் இதை­விட குறைந்த சர்ச்­சையே ஏற்­பட்­டி­ருக்கும் எனவும் அவ்­வே­ளையில் கூறி­யி­ருந்தார்.

இதற்­குமுன் 2008 ஆம் ஆண்டு மாலாவி நாட்டில் பாட­சா­லை­யொன்றை அமைப்­ப­தற்கு மடோனா மேற்­கொண்ட முயற்சி தோல்­வி­ய­டைந்­த­துடன் அவ­ருக்கு பெரும் சங்­க­டத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

லொஸ் ஏஞ்­சல்ஸை தள­மாகக் கொண்ட சர்­வ­தேச கப்­பலாஹ் நிலையம் எனும் தனது நல­நி­தி­ய­மொன்றின் ஊடாக இப்­பா­ட­சா­லையை அமைப்­ப­தற்கு மடோனா முயற்­சித்தார். ஆனால் இத்­திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட பல மில்­லியன் டொலர் பணம் ஆடம்­ப­ர­மா­க­ செ­ல­வி­டப்­பட்­ட­துடன் பாட­சா­லைக்­கான ஒரு கல்­கூட நடப்­ப­ட­வில்லை. ஆனால், அந்­நல நிதி­யத்­துக்­கான இயக்­குநர் சபையில்  மடோனா அங்கம் வகிக்காததால் அவர் மீதிருந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பினார். இப்பின்னணியிலேயே தற்போது புனித அல் குர் ஆனை கற்றுக்கொள்வதுடன் இஸ்லாமிய நாடுகளில் சிறுமிகளுக்கான பாடசாலைகளை நிர்மாணித்து வருவதாக மடோனா கூறியுள்ளார் 
(இன்ஷா அல்லாஹ் அன்னாருக்கு ஹிதாயத் கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக!)
புனித அல் குர்ஆனை கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ள மடோனா
Disqus Comments