டுபாயில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இவர் தொழில் வாய்ப்புக்காக டுபாய்க்கு சென்றுள்ளார்.
21 வயதுடைய முஸ்தபா ஸஹீன் என்பவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தவராவார்.
சடலம் தற்போது டுபாயிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
