தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் வாயில் டேப் ஒட்டியதாக நர்ஸ் ஒருவர் மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு தந்தை ஒருவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள செபு நகரில் உள்ள மருத்துவமனையின் ரேயன் நாவல் என்பவரது மனைவி ஜாஸ்மினுக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவில் உள்ள அக்குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அதன் வாயில் டேப் ஒன்றை ஒட்டியுள்ளார் குழந்தையை பராமரிக்கும் பணியில் இருந்த நர்ஸ் ஒருவர்.