Thursday, May 15, 2014

விமல் வீரவன்ச தலைமையிலான குழு - மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

கசினோ சட்டத்தை அரசு முற்றாக மீளப்பெறும் வரை தேசிய சுதந்திர முன்னணியினர் போராட வேண்டியுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழு மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர்களிடம் தெரிவித்தது.

நேற்று  கண்டி மல்வத்த மகாநாயக்க ஸ்ரீசுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் ஆகியோரை சந்தித்து நல்லாசி பெற்றதை தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணியினர் தயாரித்துள்ள 12 அம்சக் கோரிக்கை தொடர்பாக தேரர்களிடம் கலந்துரையாடினார்கள்.
 
12 அம்சக் கோரிக்ககை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,
தேரர்களின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதியுடன் மேற்படி 12 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
 
இதில் முக்கியமாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கைவைக்கக் கூடாது. மாகாண சபைகளுக்கு எது வித அதிகாரங்களும் வழங்கக் கூடாது. தென்னாபிரிக்க அனுசரணையுடனான சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அரசு இணங்கக் கூடாது. கசினோ சட்டத்தை அரசு முற்றாக மீளப் பெறவேண்டும் என்பன முக்கியமானவை என தெரிவித்தார்
Disqus Comments