முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு பிரதேசத்தில் குடிநீர் திட்டத்திற்கான நீர்தாங்கிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(25) நடைபெற்றது.
மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்திற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சேகு அலாவூதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.