Tuesday, May 13, 2014

பேஸ்புக்கில் பணப்பரிமாற்றம் விரைவில அறிமுகம் செய்யப்படும்.

வாடிக்கையாளர்களை மேலும் தன்னகத்தே ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைத்தளம், தற்போது வங்கியில் இடம்பெறுவதைப்போன்ற பணிப்பரிமாற்றம் செய்யும் ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
குறித்த சேவை வங்கிகள் அளிக்கும் 'இன்டர்நெட் பேங்கிங்" வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை அனுப்பிவிட முடியும். 
 
இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கையே பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்துகொள்ளலாம். தற்போது இந்த சேவையை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பணிகள் வேகமாக இடம்பெற்று வருகிறது.
 
இந்த பணிகள் நிறைவடைந்ததும் இலவசமாகவே, இவ்வசதியை அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்களும் பெறலாம். பேஸ்புக் நிறுவனம் இச்சேவையை முதலில் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தி, அங்கு கிடைக்கும் வெற்றியை மதிப்பீடு செய்த பின்னர் பிறநாடுகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற்றால் வங்கிகள் வழங்கும் அனைத்து சேவைகளையும் பேஸ்புக் மூலமாக பெறலாம். 
 
இன்றைய உலகில் பல்வேறு சமூக வலைதளங்கள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வலைதளங்களின் வரிசையில் பேஸ்புக் முதலிடத்தில் இருந்து வருகிறது. 
 
வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் கூகுள் வலைத்தளத்திற்கு இணையாக பேஸ்புக்கும் வளர்ந்துள்ளது.
 
குறிப்பாக இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் அனைத்து கட்டணங்களையும் பேஸ்புக் வலைத்தளத்தின் மூலமாகவே செலுத்தலாம். இதேநிலை தொடர்ந்தால் எதிர்வரும் 10 ஆண்டுகளில் பேஸ்புக் வலைத்தளம் கூகுள் நிறுவனத்தை பிடித்துவிடும்.
Disqus Comments