Sunday, May 18, 2014

*உலகளவில் இளம்பருவத்தினரை தாக்கும் நோய்களில் முதலிடத்தில் மனஅழுத்தம் !*

உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மனஅழுத்தம் காரணமாக மனநலம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மனஅழுத்தம் அவர்களது 14ஆவது வயதில் தொடங்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புகையிலை, மதுபானம் மற்றும் போதை பொருள் பயன்பாடு, HIV, காயங்கள், மனநலம், ஊட்டச்சத்து, இனப்பெருக்கத்தில் சுகாதாரம் மற்றும் வன்முறை ஆகிய பல்வேறு விவகாரங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், இளம்பெண்களை விட இளைஞர்கள் 3 மடங்கு அதிகமாக பலியாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொது போக்குவரத்தை அதிகரித்தால் விபத்தை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் மற்றும் வேக எல்லைகள் ஆகியவை குறித்த சாலை பாதுகாப்பு விதிகளைமேம்படுத்துதல், பள்ளிககள் உள்ள பகுதிகளை சுற்றி பாதுகாப்பான நடைபாதைகளை ஏற்படுத்துதல், மற்றும் சாரதிகள் அதிக நேரம் வேலை செய்வதற்கு ஏற்ற பயிற்சி திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதை மேற்கொள்வதில் பல நாடுகளுக்கு அதிக சிரமமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்பருவத்தினர்களுக்கு தேவையான பாதுகாப்பை அதிகரித்தால் மரணத்தை தவிர்ப்பதுடன், வாழ்க்கை முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாவதையும் தடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், சாலை விபத்துகளால் 2012ஆம் ஆண்டு உலக அளவில் 10.3 இலட்சம் இளைஞர்கள் பலியாகியுள்ளனர் எனவும் அப்போது உலக அளவில் பலியாவோரில் முதல் மூன்று காரணங்களாக சாலை போக்குவரத்தில் ஏற்படும் காயங்கள், எய்ட்ஸ் நோய் மற்றும் தற்கொலை ஆகியவை இருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் உட்பட இளைஞர்களின் இனப்பெருக்க சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானியும், அறிக்கையின் தலைமை எழுத்தாளருமான ஜேன் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் கடந்த 2000மாவது ஆண்டிலிருந்து இதுவரை 57 சதவீதமும், மத்திய கிழக்கு நாடுகளில் 50 சதவீதமும் மற்றும் ஆப்ரிக்காவில் 37 சதவீதமும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தும் தட்டம்மை 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் பிற நோய்களைவிட மரணத்திற்கு காரணமாக இருந்தது தட்டம்மை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேலை நேரம், குடும்ப சுமை, வேலையில்லா திண்டாட்டம், கடன் சுமை, காலதாமதமான திருமணம், கலாச்சார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள நோய்களில் மனஅழுத்தம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments