Thursday, May 15, 2014

Oxford Dictionary யில் 99 ஆண்டுகள் நீடித்த தவறு கண்டுபிடிப்பு


ஒக்ஸ்போர்ட் டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட தவறை தற்போது விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு வடிகுழாய் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஒக்ஸ்போர்ட் டிக்‌ஷ்னரி விவரித்துள்ளது. அதாவது, வளிமண்டல அழுத்தம் தான் வடிகுழாயை இயக்கும் சக்தியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மையல்ல. புவி ஈர்ப்பு விசையே வடி குழாயின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகும். கடந்த 2010 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீபன் ஹியூஸ் ஒக்ஸ்போர்ட் டிக்‌ஷ்னரியில் உள்ள இத்தவறைக் கண்டுபிடித்துள்ளார்.
அவர் உடனடியாக இதற்கான ஆய்வை நடத்தி உண்மையைப் புரிய வைத்ததையடுத்து தற்போது ஒக்ஸ்போர்ட் நிர்வாகம் தனது தவறைத் திருத்திக்கொண்டுள்ளது.
Disqus Comments