Saturday, July 26, 2014

மரண தண்டனை விதிக்கப்பட்ட சூடானிய பெண் ரோமில் பாப்பரசருடன் சந்திப்பு

மதம் மாறி­ய­மைக்­காக மரணதண்­டனை விதிப்­புக்­குள்­ளாகி பின்னர் விடு­தலையான சூடா­னிய பெண்­ணான மரியம் யஹியா இப்­ராஹிம் இஷாக் பாப்­ப­ரசர் பிரான்­சிஸை சந்­தித்து ஆசீர்­வாதம் பெற்­றுள்ளார்.
சூடா­னி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தில் ஒரு மாத கால­மாக தஞ்­ம­டைந்­தி­ருந்த மரியம், தனது கண­வ­ருடனும் இரு பிள்­ளை­க­ளுடனும் இத்­தா­லிய ரோம் நகரை வந்­த­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
மரி­யத்தின் தந்தை முஸ்லிம் என்­பதால் இஸ்­லா­மிய சட்­டத்தின் பிர­காரம் மரி­யமும் முஸ்லிம் எனவும் அவர் மதம் மாற முடி­யாது எனவும் தெரி­வித்து அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று அவ­ருக்கு மரணதண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.
இந்த தீர்ப்­பா­னது உல­க­ளா­விய ரீதியில் கடும் கண்­ட­னத்தை தோற்­று­வித்­தி­ருந்­தது.இந்­நி­லையில் கிறிஸ்­தவ தாயாரால் வளர்க்­கப்­பட்ட தான், ஒரு­போதும் இஸ்­லா­மிய மதத்தை பின்­பற்­ற­வில்லை என மரியம் வாதிட்டார். தென் சூடானைச் சேர்ந்த கிறிஸ்­த­வ­ரான மரி­யத்தின் கணவர் இப்­ராஹிம் ஒரு அமெ­ரிக்கப் பிர­ஜை­யாவார். சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மாக கடந்த ஜூன் மாதம் மரியம் விடு­தலை செய்­யப்­பட்ட போதும், அமெ­ரிக்கா செல்ல முயன்ற­ வேளை போலி பயண ஆவ­ணங்­களை வைத்­தி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு விமான நிலை­யத்தில் அவர் கைது செய்­யப்­பட்டார்.
தொடர்ந்து நாட்டை விட்டு வெளி­யேற முடி­யாத நிலையில் அவர் சூடா­னி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தில் தஞ்­ச­ம­டைந்தார்.
இந்­நி­லையில் கடந்த வாரம் மரி­யத்தின் தந்­தையின் குடும்­பத்­தினர், முஸ்லிம் பெண்­ணொ­ருவர் முஸ்­லி­மற்­ற­வரை திரு­மணம் செய்ய முடி­யாது என்ற வகையில் அவ­ரது திரு­ம­ணத்தை இரத்து செய்­வ­தற்கு வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தனர்.
அதே­ச­மயம் சூடா­னி­லுள்ள ஹம்ஸா என்ற போரா­ளிக்­குழு மரி­யத்­தையும் அவ­ருக்கு உத­வு­ப­வர்கள் அனை­வ­ரையும் கொல்லப் போவ­தாக இரு நாட்­க­ளுக்கு முன் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது.
இத­னை­ய­டுத்து சூடானில் தொடர்ந்­தி­ருப்­பதன் அபா­யத்தை கருத்­திற்­கொண்டு அவ­ருக்கு நாட்டை விட்டு வெளி­யேற அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.
மரி­யத்­து­ட­னான அரை மணிநேர சந்திப்பின் போது பாப்பரசர், அவர் விசுவாசத்துக்கு சாட்சியாக உள்ளமை தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்ததாக வத்திக்கான் பேச்சாளர் அருட்தந்தை பெடேறிகோ லொம்பார்டி தெரிவித்தார்.
Disqus Comments