விருதோடை 601 கிராம சேவகர் பிரிவில் உள்ள இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாக எள்ளுச்சேனை வெள்ளைப் புறா விளையாட்டுக் கழகம் “எள்ளுச்சேளை பிரிமியர் லீக் - (EPL)” என்னும் மகுடம் தாங்கிய ஒரு சகோதரத்துவ கிரிக்கட் மென்பந்து சுற்றுப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இந்த போட்டிகளுக்கு முதற்கட்டமாக விருதோடைக் கிராம சேவகர் பிரிவில் உள்ள அணிகர் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளன. உள்ளுர் விளையாட்டு விரர்களை ஊக்கப்படுத்தி அவர்களை பயிற்றுவித்து எதிர்காலத்தில் விளையாட்டு துறையில் கால் பதிப்பவர்களாக தயார் செய்வதே இந்த மென்பந்து கிரிட்கட் சுற்றுப் போட்டியின் நோக்கமாகும்.
முதல் இரு அறிமுகப்போட்டிகள் நடாத்தப்பட்டுள்ள நிலையில் அரையிறுதி, மற்றும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 8.8.2014ம் திகதி (எதிர்வரும் வெள்ளிக்கிழமை) வெள்ளைப் புறா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் முஸம்மில் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளதோடு, பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவர், உறுப்பினர்கள், மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெறும் அணிக்கு பெறுமதிவாய்ந்த ஊக்கு விப்பு பரிசில்கள் வழங்கப்பட உள்ளதோடு, சிறப்பாக பிரகாசிக்கும் வீரர்களுக்கம் அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த பரிசில்கள் வழங்கப்படவிருக்கின்றன.
இது தொடர்பாக எமது இணையத்தை தொடர்பு கொண்டு பேசிய ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அஸாம் அவர்கள்,
இது முதற்கட்ட ஏற்பாடாவே இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இது போன்ற பெரிய அளவிலான போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடுää கூடிய சீக்கிரம் மென்பந்து மட்டுமே விளையாடிவரும் எமது வீரர்களுக்கு மத்தியில் ஹாhட்போல் அறிமுகப் செய்யப்படவிருக்கின்றது என்பதை தெரிவித்தார்.
