ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 69 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் ஜப்பானின் பல பகுதிகளிலும் நடைபெற்றன.
அணுவீச்சு நடத்தப்பட்ட இடத்தில் சுமார் 45 ஆயிரம் பேர் தமது அஞ்சலிகளை செலுத்தியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல்
நடத்தப்பட்ட பகுதிகளில் தற்போது அபவிருத்தி மேற்கொண்டுள்ளதாகவும் அதனை
நேரில் வந்து பார்வையிடுமாறும் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஏனைய
உலகத்தவைர்களுக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
1945ஆம் ஆண்டு
நடத்தப்பட்ட தாக்குதலில் 1,40,000 பேர் கொல்லப்பட்டதுடன் நாகசாஹியில்
நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலில் 70,000 பேர் வரையில் கொல்லப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
