Sunday, August 10, 2014

மதுரங்குளி, கரிக்கட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது.

கஞ்சாவை  பல இடங்களுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவரை மதுரங்குளி, கரிக்கட்டை வஜிரவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை  கைதுசெய்ததாக புத்தளம் குற்ற ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மொனராகலை மற்றும்  கட்டுநாயக்கவைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து  இரண்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் கஞ்சாவை மொத்தமாக பஸ்களில் கொண்டுவந்து சில்லறையாக விற்பனை செய்பவர்களிடம் விநியோகித்து வந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்  இந்தச் சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முகமாக  முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments