Sunday, August 10, 2014

ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது; குழந்தைகள் உள்பட 48 பேர் பலி(photo)

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்தற்கு உள்ளானதில் 48 பேர் பலியாகியுள்ளனர்.

கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ரபாஸ் நகர் நோக்கிப் பயணித்த விமானம் மெஹ்ராபாத் விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்துள்ளதாக ஈரானின் அரச தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து சிறுவர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக ஈரானின் விமான சேவைகள் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பழமையான விமானங்களைப் பயன்டுத்துகின்றமை மற்றும் தரமற்ற பராமரிப்பு போன்றன ஈரானில் இடம்பெறும் பல விபத்துக்களுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் கொள்வனவு செய்த விமானங்களையே ஈரான் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கதக்கது,
52 அமெரிக்க விமானப் பணியாளர்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து ஈரானுக்கு எதிராக சர்வதேச வர்த்தக தடைவிதிக்கப்பட்டுள்ளது.



Disqus Comments