Saturday, August 2, 2014

கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை

பன்வில பிரதேசத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 27 வயதான ஆணும் 24 வயதான பெண்ணும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களது தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
Disqus Comments