Saturday, September 6, 2014

18 நாட்களேயான சிசுவை நிலத்திலடித்த பெண் கைது - இலங்கையில் நடைபெற்றது.

பிறந்து 18 நாட்களேயான ஆண் சிறுவொன்றை நிலத்தில் அடித்த 22 வயது பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று பொல்கஸ்ஓவிட்ட, அம்பலங்கொட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிசு, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், அந்த சிசுவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண், குறித்த சிசுவின் தந்தை வழி உறவினர் என்றும் அவரும் அவர்களுடன் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது, அந்த சிசு அதனது தாயிடமே இருந்துள்ளதாகவும் தாயிடமிருந்து சிசுவைப் பறித்தே, சந்தேகநபரான பெண் அதனை நிலத்தில் அடித்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Disqus Comments