பலாங்கொடை - வலேகொட பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தனது பாட்டியை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 வயதுடைய சிறுவன் தனது பாட்டியிடம் 800 ரூபாவினை கேட்ட போது பாட்டி
கொடுக்காததால் பொல்லால் 3 தடவைகள் தலையில் தாக்கியதில் பாட்டி
உயிரிழந்துள்தாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 103 வயதுடைய பாட்டியே உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
