Thursday, September 25, 2014

எட்டிப்பார்த்த மாணவனின் உயிரைப் பறித்த புலி.... மிகவும் பரிதாபமான காட்சி!

டெல்லி உயிரியல் பூங்காவில் 12ம் வகுப்பு மாணவனை புலி ஒன்று அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலியை பார்த்து ரசித்து கொண்டிருந்த ஹிமான்சு என்ற மாணவன், திடீரென புலியினால் இழுத்து செல்லப்பட்டு கொடூரமாய் கொல்லப்பட்டுள்ளான்.

இதுகுறித்து அங்கு வந்த உல்லாச பயணிகள் கூறியதாவது, புலியை மாணவர் பார்த்துக் கொண்டு இருந்த போது எதிர்பாரதவிதமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் புலியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தடுப்புக்கள் மிகவும் குறைந்த உயரமாக இருந்தது என்றும் மாணவனின் அபாயக் குரலை கேட்டு வெகு நேரங்கழித்தே பாதுகாவலர்கள் வந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மாணவன் புலி அடைக்கப்பட்டு இருந்த கூண்டுக்குள் குதித்துவிட்டார் என வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மாணவன் பலியான இடத்தை பார்வையிட்டதுடன், தற்போது இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- See more at: http://www.manithan.com/news/20140924112416#sthash.K1BF6tNI.dpuf
Disqus Comments