கொல்லம், கேரளா மாநில சாலை விபத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு வந்த 6 என்ஜினியரிங் மாணவர்கள் உயிரிழந்தனர்.
கேராளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 6 பேர் புத்தாண்டை கொண்டாட வார்காலா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு இரவு புத்தாண்டை கொண்டாடிவிட்டு கல்லூரிக்கு காரில் திரும்பினர். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 என்ஜினியரிங் மாணவர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உடனடியாக சடலங்களை கைப்பற்றி போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை உடைத்து மாணவர்களின் உடலை மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் எடுத்தனர். டேங்கர் லாரியுடன் கார் மோதியதும் தூக்கி எறியப்பட்டுள்ளது. டேங்கர் லாரியின் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாடிவிட்டு திரும்பிய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் அஜித் பிரகாஷ், சயத், அருண் பாபு, ஜார்ஜ் ஜான், அதிர்ஷாக், நிக்சன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.