Saturday, January 17, 2015

நாடாளுமன்றம் ஏப்ரல் 24ஆம் திகதி கலைக்கப்படும் சாத்தியம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து ஜுன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் முடிந்த பின்னர் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (16) கையளித்துள்ளார். 

புதிய ஜனாதிபதியின் தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னேடுத்துச் செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே செயற்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன - 
Disqus Comments