ஜனாதிபதித் தேர்தலின் போது அலரி மாளிகையில் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; தேர்தல் அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகை பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகும். எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட போது அலரி மாளிகையினையே உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தி வந்தார்.
குறித்த வாசஸ்தலத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயன்படுத்த ஆரம்பித்த குறித்த தேர்தல் அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100க்கு மேற்பட்ட கணணிகள் காணப்பட்ட இந்த அலுவகத்தில், ஒவ்வொரு கணணியும் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







