Sunday, January 18, 2015

மாணவிக்கு மா்ம உறுப்பைக் காட்டியதால் ஆசிரியரை மரத்தில் கட்டிய மக்கள். தம்புள்ளையில் சம்பவம்.

பாடசாலை ஆசிரியா் ஒருவரை பிடித்து மரத்தில் கட்டிய சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.

தம்புள்ளை 40ம்  கட்டை என்ற இடத்திலேயே  மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது அந்தரங்க
பகுதியை காட்டியதைத் தொடா்ந்தே பிரதேசவாசிகள்  குறிப்பிட்ட ஆசிரியரை பிடித்து  மரத்தில் கட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.

சந்தேக நபரின் தொலைபேசியை சோதனை செய்த போது 100க்கும் அதிகமாக ஆபாசப் படங்களும் சில மாணவிகளை தனது மொபைலில் தனது மொபைல் போனில் படம்பிடித்த புகைப்படங்களும் இருந்ததாக தம்புள்ளை  போலிசார் தெரிவிக்கின்றனா்  சந்தேக நபா் இன்று தம்புளை நீதிமன்றில் ஆஜா்படுத்தப்ப உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனா்.
Disqus Comments