Wednesday, January 14, 2015

மஹிந்த ராஜபக்ஷவினால் மறைத்து வைக்கப்பட்ட சிறிய ரக விமானம் சிக்கியது.

மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானமொன்று கொழும்பு 5இல் உள்ள பொருளாதார வலயத்தில் பொலிஸாரினால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இருந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சீ.எஸ்.என் நிறுவனத்தின் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே மேற்படி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இருவர் பயணிக்கலாம் எனவும் இந்த விமானத்தை இயக்குவதற்கு தேவையான பொருட்டிகள் அவ்விடத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Disqus Comments