இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்டார் அமீர் அஷ் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி, துணை அமீர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஹமத் அல் தானி, அந்நாட்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாசர் பின் கலீஃபா அல்-தனி, இலங்கைக்கான கட்டார் தூதுவர் ரஷித் பின் ஷபீ அல் மர்ரீ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் தமது வாழ்த்துக்களின் போது ஜனாதிபதியின் வெற்றிக்காகவும், முன்னேற்றத்துக்காவும் பிரார்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
