Wednesday, January 14, 2015

YMMA SCHOLARSHIP 2015( ZAKATH FUND) | வை.எம்.எம்.ஏ.புலமைப்பரிசில் 2015 (ஸகாத் நிதி)

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையினால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் க.பொ.த. சாதரணதர பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த. உயர்தர முதலாம்  வருடத்தில் கல்வி பயிலும் பொருளாதார வசதிகுறைந்தஇ திறமையூள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் இவ்வருடமும் வழங்கப்படவூள்ளது.
விண்ணப்பதாரர் 2013 டிசம்பர் க.பொ.த.(சாதாரண தர) பரிட்சைக்கு தோற்றி குறைந்த பட்சம் ஏதாவதொரு பாடத்தில் 1A உடன் கணிதம்இ இஸ்லாம் பாடங்கள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
இத்தகுதியை  உடையவர்கள்  உங்கள் பகுதிகளில் இயங்கும் வை.எம்.எம்.ஏ.களில் இருந்தும் அல்லது  www.ymma.lk என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் (Download) செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு:      இப்புலமைப்பரிசில் ஸகாத் பெறதகுதியானமிகவூம் வறிய     மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் ஸகாத் பெற தகுதியானவர்கள்     மாத்திரம்     விண்ணப்பிக்கும் படிபணிவூடன் வேண்டிக்கொள்கிறௌம்.
விண்ணப்பப்படிவங்களை ஒழுங்கான முறையில் பூர்த்திசெய்து அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் போட்டோ பிரதிகளுடன் அண்மையிலுள்ள அங்கத்துவ வை.எம்.எம்.ஏ களில் உறுதிசெய்யப்பட்டு எதிர்வரும் 2015.01.15  ஆம் திகதிக்கு முன்னர் கீழ்கானும் முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக தபால் மூலம் அனுப்பிவைக்கவூம்.
National General Secretary
All Ceylon YMMA Conference
No.63,Sri Vajiragnana Mawatha,
Colombo-09
எம்.என்.எம். நபீல்
தேசியபொதுசெயலாளர்
ஏனைய விபரங்களுக்கு 0112-694075  - 0772300217 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவூம்.
Disqus Comments