ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெற்றியீட்டியதை அடுத்து மஹிந்தவின் பக்கம் இருந்த பலபேர் மைத்திரியுடன் இணைந்து கொண்டனர். இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மைப் பலத்தை இழந்து தத்தளிக்க ஆரம்பித்துள்ளது.
தற்பொழுது மஹிந்தவுக்கு ஆதரவாக 112 பேர் காணப்படும் அதே வேளை மைத்திரியின் பக்கமும் 112 பேர் உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பொது வேட்பாளராகக் களமிறங்கியவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 25 பேர் மைத்திரியுடன் இணைந்து கொண்டனர். அந்த 25 பேரும் பின்வருமாறு...
ராஜித சேனாரத்ன
பாடலீ சம்பிக்க ரனவக்க
நவீன் திஸ்ஸானாயக்க
ரவூப் ஹகீம்
துமிந்த திஸ்ஸானாயக்க
ரிஷாத் பதியுத்தீன்
பஷீர் சேஹுதாவூத்
எம்.கே.டி.எச். குணவர்தன
பைஸர் முஸ்தபா
பீ. திகாம்பரம்
வீ. ராதா கிருஷ்ணன்
நந்திமித்ர ஏக்கனாயக்க
அதுரலியே ரதன தேரர்
ரஜீவ் விஜேசிங்க
வசந்த சேனானாயக்க
அச்சல ஜாகொட
பீ. ராஜதுரை
ஹுனைஸ் பாரூக்
அமீர் அலி
மொஹமட் அஸ்லம்
ஹசன் அலி
பைஸல் காசிம்
எச்.எம்.எம். ஹாரிஸ்
எம்.எஸ். தெளபீக்
முத்தலி பாவா பாரூக்
இதே வேளை மைத்திரிபால சிரிசேன வெற்றி பெற்றதன் பின்னர் நேற்றிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் மஹிந்த அணியில் இருந்த பிரபலங்கள் 10 பேர் மைத்திரியுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் பின்வருமாறு...
சரத் அமுனுகம
பியசேன கமகே
எஸ்.பீ. நாவின்ன
அதாவுத செனவிரட்ன
மில்ரோய் பெர்னான்டோ
ஜனக பண்டாட தென்னகோன்
ரெஜினோல்ட் குரே
விஜித் விஜயமுனி சொய்சா
ஜகத் புஷ்பகுமார
நில்வலா விஜேசிங்க
இதற்கு மேலதிகமாக பின்வரும் 11 பேரும் மைத்திரி அணியுடன் வந்து இணைந்து கொண்டுள்ளனர்.
பீலிக்ஸ் பெரேரா
ஆறுமுகம் தொன்டமான்
தயாஷ்ரித திசர
நியோமல் பெரேரா
லலித் திஸ்ஸானாயக்க
சனத் ஜயசூரிய
முத்து சிவலிங்கம்
அப்துல் காதர்
அருந்திக பெர்னான்டோ
மனூஷ நானயக்கார
திலங்க சுமதிபால
அத்துடன் மஹிந்தவின் பக்கம் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் அங்கத்தவர்கள் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள்
திஸ்ஸ விதாரன
டியு குணசேகர
வாசுதேவ நாணயக்கார
சந்திரசிரி கஜதீர
வை.பீ. பத்மசிரி
ஆகியோராவர். மைத்திரி களமிறங்க முன்னர் மஹிந்தவின் பக்கம் 161 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
