Wednesday, January 14, 2015

நேற்றைய அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சுவா­ரஷ்ய சம்­ப­வங்கள்

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை மையில் நேற்று நடை­பெற்ற புதிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சில சுவா­ரஷ் ­ய­மான சம்­ப­வங்கள் இடம்­பெற்றதை அவ­தா­னிக்க முடிந்­தது.
அமைச்­சர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்கள் ஜனா­தி­ப­தி­யினால் வழங்­க ப்­பட்­டன. ஜனா­தி­பதி செய­லாளர் பி.பி. அபேகோன் நிய­மனக் கடி­தங்­களை வழங்கும் ஏற்­பா­டு­களை செய்­து­கொண்­டி­ருந்தார்.
ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன சபைக்கு வந்து ஆச­னத்தில் அமர்ந்­ததும் அதி­காரி ஒருவர் அமை ச்­சர்­க­ளுக்­கான நிய­மனக் கடி­தங்கள் அடங்­கிய அனைத்து கோப்­புக்­க­ளையும் ஒரு கதி­ரையில் வைத்து கதி­ரையை நகர்த்தி ஜனா­தி­பதி செய­லா­ள­ரிடம் கொண்­டு­வந்தார். அப் ­போது கதிரை திடீ­ரென சாய்ந்­து­விட்­டது. இதனால் கோப்­புக்கள் அனைத்தும் கீழே விழுந்­தன. இத னை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்க காத்­தி­ருந்­த­ வர்­களும் அவ­தா­னித்­தனர்.
பின்னர் குறித்து அதி­காரி உட­ன ­டி­யாக கோப்­புக்­களை சரி செய்து ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்தார். முதலில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சி ங்க திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­ தார அலு­வல்கள் அமைச்­ச­ராக பத ­வி­யேற்றார்.
அமைச்­சர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்­கிய ஜனா­தி­பதி அனை­வ­ருக்கும் நிய­மனக் கடி­தங்­ களை வழங்­கி­விட்டு கைகூப்பி மரி­ யாதை செய்தார். ஆனால் அமைச்­ சர்­க­ளான ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் கபிர் ஹஷீம் ஆகி­யோ­ருக்கு ஜனா­தி­பதி கைலாகு கொடுத்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.
நிய­மனக் கடி­தங்­களில் உள்ள வாச­கத்தை வாசித்து சத்­திய பிர­மாணம் செய்­து­விட்டு அதில் கையொப் பம் இடு­வ­தற்கு இரண்டு பேனை­களை ஜனா­தி­பதி செய­லாளர் அபேகோன் அங்கு வைத்­தி­ருந்தார். இந்­நி­லையில் வீட­மைப்பு சமுர்த்தி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற சஜித் பிரே­ம­தாச நிய­மனக் கடி­தத்தில் தனது பேனையை எடுத்தே கையொப்பம் இட்டார். அதன் பின்னர் பல அமைச்­சர்கள் இவ்­வாறு செய்­தனர்.
எம்.கே.டி.எஸ். குண­வர்த்­தன காணி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற­போது ஜனா­தி­ப­தியின் பக்கம் திரு ம்பி நின்­று­கொண்டு கையொ­ப்பம் இட முயற்­சித்தார். அப்­போது ஜனா­தி­பதி அவரை மறு­பக்கம் அதா­வது செய­லாளர் பக்கம் திரும்பி கையொ ப்பம் இடு­மாறு கூறினார்.
சுகா­தார அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ராஜித்த சேனா­ரட்ன சத்­தி­ய­ பி­ர­மா­ணத்தை வாசிக்கும் முன்னர் கையொப்பம் இட்­ட­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது. கையொப்பம் இட்ட பின்னர் அவர் சத்­தி­ யப் ­பி­ர­மா­ணத்தை வாசித் தார்.
பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற லக்ஷ்மன் கிரியெல்­லவும் சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற நவீன் திசா­நா­யக்­கவும் சத்­தி­ய­ப்பி­ர­மா­ணத்தை செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யிடம் நிய­மனக் கடி­தங்­களை வாங்­காமல் வந்­து­விட்­டனர். பின்னர் ஜனா­தி­பதி அழை த்து அவர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்­கினார்.
மேலும் பிர­தி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்ற விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் இரா­ஜாங்க அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ராதா­கி­ருஷ்­ணனும் தமிழ் மொழியில் சத்­தி­ய­பி­ர­மாணம் செய்­தனர்.
இதே­வேளை நிகழ்வு ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ரவிகரு­ணா­நா­யக்­க­வு டன் நீண்­ட­நேரம் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தார். மேலும் சந்­தி­ராணி பண்­டார ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் கலந்­து­ரை­யா­டினார்.அத்­துடன் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பைசர் முஸ்­த­பா­வு­டனும் அர் ­ஜுன ரண­துங்­க­வு­டனும் சொற்­ப­நேரம் கலந்­து­ரை­யா­டினார். வீட­மை ப்பு அமைச்­ச­ராக பதவியேற்ற சஜித் பிரேமதாச நிகழ்வு ஆரம்பிக்க சற்று நேரத்துக்கு முன்னரே சபைக்குள் வந்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனா திபதி பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவும் வருகை தந் திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களின் உறவினர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments