Sunday, January 4, 2015

வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினம் இன்று.

அத்துடன், உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் இறுதி தினமும் இன்று என தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ண குறிப்பிட்டார்.

இதுவரை 94 வீதமான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கடந்த காலங்களில் சீரற்ற வானிலை நிலவிய போதிலும், உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை உரிய முறையில் விநியோகிக்க முடிந்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் கூறினார்.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமக்குரிய தபால் அலுவலகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
Disqus Comments