Monday, March 28, 2016

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் - SLTJ PUTTALAM

(தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) - புத்தளம் மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புத்தளம் மாவட்ட செயற்குழு நேற்று (27) கல்பிட்டியில் காலை 10: 30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு பகல் 2:00 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சகோ. எம்.ஆர்.எம். பவ்சாத் தலைமையில் நடைபெற்ற இச் செயற்குழு கூட்டத்தில புத்தளம் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் பிரச்சாரகர்கள் கலந்து கொண்டனர். ஏதிர் கால தஃவா செயல்பாடுகள், சமூதாய பணிகள் போன்ற விடயங்கள் இதில் பேசப்பட்டன.
நிகழ்வின் இறுதிக் கட்டமாக ஸ்ரீ.ல.த.ஜ. புத்தளம் மாவட்ட பொருளாளர் சகோதரர் நவாஸ் அவர்களால் செயற்குவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சபையோர் தக்பீர் முழக்கத்துடன் அவற்றை அங்கீகரித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புத்தளம் மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்கள்.
குடிநீர் பற்றாக்குறை சம்பந்தமாக
புத்தளம் மாவட்டத்தில் பல பின்தங்கிய கிராமங்களில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது மிக அவசரமாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் குடிநீர் பிரச்சினைகள் நிலவி வரும் கிராமங்கள் இனங்காணப்பட்டு ஒரு நிரந்த குடிநீர் விநியோகத் திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இச் செயற்குழு அரசிடம் கோரிக்கை வைக்கிறது.

போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பாக
புத்தளம் மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள்ஃகுடும்பஸ்தர்கள் மத்தியில் போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணத்தினால் பல குடும்பங்களில் குடும்ப பிரச்pனைகள் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் விற்பனை செய்பவர்களும் போதைப்பொருள் பாவனையாளர்களும் பொலிசாரால் கைது செய்யப்படுவதும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் இப்பிரச்சினை தொடர்வதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. எனவே போதை பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச் செயற்குழு கோரிக்கை வைக்கிறது.

பாடசாலை மட்டத்திலும் போதைப் பொருள் பாவனை
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாவாபீடா மற்றும் பாண்பராக் போன்ற போதை தரக்கூடிய பொருட்கள் பாவனை அதிகரித்து வருகிறது. இது மாணவர் சமுதாயத்தின் கல்வியை பெரிதும் பாதிக்கும் செயலாகவே நாம் காண்கின்றோம். எனவே பாடசாலை நிர்வாகங்களும் சம்பந்தப்பட்ட கல்வி உயர் அதிகார்களும் இதற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு பாடசாலை மாணவர்களுக்கு இவற்றின் பாதிப்புக்கள் பற்றிபூரண தெளிவு வழங்கப்பட வேண்டும் எனவும் இச் செயற்குழு கோரிக்கை வைக்கிறது.

சிறுவர் துஷ்பிரயோகம்
புத்தளம் மாவட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளது பலரும் அறிந்த விடயம். இப்பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பாடசாலை சிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே இது போன்ற சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறார்களின் வாழவுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் அரசிடம் இச் செயற்குழு கோரிக்கை வைக்கிறது.
காதி நீதி மன்றங்கள்
புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நீதி மன்றமாக காதி நீதி மன்றங்கள் காணப்படுகின்றன. இந்நீதி மன்றங்களில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மிகவும் கால தாமதமாகவே வழங்கப்படுகிறது. குறிப்பாக புத்தளம் மாவட்ட காதி நீதி மன்றில் சம்பந்தப்பட்ட கனவனும் மனைவியும் விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டாலும் கூட தீர்ப்பு வழங்குவதற்கு 1 21வருடங்களுக்கு மேல் காலமெடுக்கிறது. எனவே காதி நீதி மன்றங்களில் முன்வைக்கப்படும் வழக்குகள் ஆகக்குறைந்தது மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச் செயற்குழு கோரிக்ககை வைக்கிறது.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு
புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் ஷிர்க் எனும் இணைவைப்பு மலிந்து காணப்படுவதால் இது பற்றி விளக்கமளிக்கும் வகையில் எதிர்வரும் 01.05.2016 கல்பிட்டியில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடுஒன்றை நடாத்துவதாக இச் செயற்குழு ஏகமானதாக தீர்மானம் எடுத்துள்ளது.
Disqus Comments