இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.
ஒழுங்கான மாற்றத்துக்கான முடிவுகொண்டோரின் முடிவுகளின் அடிப்படையிலான பெறுபேறுகளை ஏற்று வெளியேறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி, ஜனநாயக சீர்திருத்தி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
