சர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய
தரவரிசைப்பட்டியலின் படி, தென்னாபிரிக்க அணி வீரர் ஏ பி டி வில்லிலயர்ஸ்
முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அதேவேளை இந்த பட்டியலுக்கு அமைய இலங்கை அணி வீரர் குமார் சங்கார
இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தில் தென்னாபிரிக்க அணி வீரர் ஆசிம்
அம்லாலும் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலாம் இடத்தில்
காணப்படுகின்றார். இரண்டாம் இடத்தில் அவுஸ்ரேலிய அணியின் ரையான் ஹாரிஸ்
தரப்படுத்தப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளின் சகல துறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில்
பங்களாதேஸ் அணியின் சஹிப் அல்-ஹசன் முதலாவது இடத்திலும்,
தென்னாபிரிக்காவின் பிலாண்டர் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின்
ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.