இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் 7 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் மைத்திரியின் வெற்றியை வரவேற்று புத்தளம் ஐ.தே.க.வினர் இன்று காலையில் இருந்து புத்தளம் ஐ.தே.அலுவலகத்தில் குழுமி இருந்ததைக் காண முடிந்தது. அதிகாலை முதலே வெடிகளுடன் களமிறங்கிய ஐ.தே.க. மற்றும் சப்ரியின் ஆதராவாளர்கள் புத்தளம் நகரை கலக்கிக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்ததது.
இதே வேளை நம்மிடம் கருத்துக் கூறிய ஐ.தே.க. புத்தளம் அமைப்பாளரும் முன்னாள் நகராதிபதியுமான எம்.என்.எம். நஸ்மி மாற்றம் ஒன்றுக்காக தமது கூட்டணி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொன்டதர்க்காக புத்தளம் தொகுதி மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் முழு இலங்கை மக்களும் நிம்மதி அடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் கூறிய அவர், இந்த வெற்றிக்காக தன்னோடு இணைந்து பணியாற்றிய அணைத்து தரப்பினருக்கும் , தனது கட்சி ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். இதே நேரம் இந்த அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ lலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அலுவலகமும் கலகலப்பாக இருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் எம்.ஜே.எம். லிப்டி, இந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட்டதாக கருத்துக் கூறினார். ( நன்றி புத்தளம் டுடே )





