சிகரெட் பெட்டிகளில் 80சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரிக்கவேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு ஒருவருடகால சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் தண்டனை இல்லையே இவையிரண்டும் விதிக்கப்படும்.
தற்போது 60சதவீதம் எச்சரிக்கை படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ள சிகரெட் பெட்டிகளை 2015ஆம் ஆண்டு ஜூன்01ஆம் திகதி வரையிலும் சந்தைக்கு விநியோகிக்கலாம். அதற்கு பின்னர் கட்டாயமாக 80சதவீதம் எச்சரிக்கை படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
