Saturday, February 28, 2015

அமெரிக்காவின் மிசௌரியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பலி

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தின் தென் மத்தியப் பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
டைரோன் நகரிலும் அதற்கு அருகிலும் ஐந்து வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை கண்டறிந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நான்கு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இரண்டு இடஙங்களை காவல்துறை தேடிவருவதாகவும் ஹூஸ்டன் ஹெரால்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த ஒரு இடத்தில், நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அருகில் சடலம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தச் சடலம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவருடையது என அவர்கள் கருதுகின்றனர்.
உள்ளூர் நேரப்படி இரவு பத்தே கால் மணியளவில் டெக்ஸாஸ் கவுண்டியின் ஷெரீஃப் அலுவலகத்தை தொலைபேசி மூலம் அழைத்த ஒரு இளம் பெண், ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறினார்.
அங்கு வந்த அதிகாரிகள், ஒரு வீட்டில் இரண்டு சடலங்களைக் கண்டறிந்தனர்.
மேலும் சோதனை நடத்தியதில் வேறு நான்கு வீடுகளில் மேலும் ஆறு பேரின் சடலங்கள் கிடைத்தனர். ஒருவர் காயமடைந்து கிடந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபரின் சடலம் அருகில் இருக்கும் ஷன்னோன் கவுண்டியில் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டது.
டைரோனைச் சேர்ந்த 36 வயது நபரான அவர், தானே சுட்டுக்கொண்டதாகக் கருதப்படுகிறது.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Disqus Comments