பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை வழங்கிய நன்கொடை யை பாப்பரசர் இலங்கைக்கு பரிசளிக்க தீர்மானித்துள்ளார்.
கடந்த மாதம் இலங்கை வந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்திற்கு 8.7 மில்லியன் ரூபாவை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை நன்கொடையாக வழங்கியது.
எனினும் அந்த பணத்தை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார்.
இந்த பணத்தில் இலங்கையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்து அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாப்பரசர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்ட கைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
