Tuesday, February 17, 2015

தரமற்ற எரிபொருளை விநியோகிக்கும் அபராதம் அறவிடும் நடைமுறை அறிமுகம்

தரமற்ற எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் அபராதம் அறவிடும் நடைமுறையொன்று அவசியம் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
அபராதம் அறவிடப்படாமை, தொடர்ந்தும் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகின்றமைக்கான பிரதான காரணமென தேசிய ஊழியர் சங்கத்தின், எரிபொருள் கிளையின் செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
உரிய தரத்தைக் கொண்டிராத 30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடன் வந்துள்ள கப்பல் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் இதனைக் கூறியுள்ளார்.
குறித்த எரிபொருளை இறக்குமதி செய்துள்ள நிறுவனம், அதற்குப் பதிலாக தரமான எரிபொருளை மீண்டும் கொண்டுவரவுள்ளதால் அபராதம் அறவிடுவதற்கான தேவை காணப்படவில்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பலகொட குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments